ஞாயிறு, 24 ஜூலை, 2011

அம்மா...

ஆயிரம் படைப்பு நாம் படைத்தாலும்
உன்படைப்புக்கு ஈடாகுமா

என்னை ஆக்கிவிட்டவளே
என்றும் விணாகாது உன் ஆக்கம்

எனக்கு சக்தி தந்தவளே
உனக்கு சக்தியின் இருப்பிடம் என்றும்

பாசத்தினை உன் இரத்தத்தால் ஊட்டியவளே
என் பாசத்தினை அணைத்து தாய் குலத்துக்கும் காணிக்கை ஆக்கிறேன்

சாதனையை சதத்தால் தந்தவளே
என்னை காக்கும் போது வீரம் தந்தவளே

உலகத்தின் ஒரு மொழியானவளே [அம்மா ]
என் சந்தோசம் அம்மா எனும் சொலில் உள்ளதே

இன்று நடமாடும் தெய்வம் நீ
அதனால் தான் அணைத்து தெய்வத்தை கும்பிடும் போது
நீ நல்லாய் இரு என்று ஏன்எனில்
தாய் நல்லாக இருந்தால்
சேய் நான் எப்படி இருப்பேன்
உலக்கதின் விலை மதிப்பற்ற சொத்தே நீ


***************************************************
அம்மா ----இயற்கையின் ஒலி
     [குழந்தை வாய்திறக்கும் பொது ; 'அ' ஒலி ,மூடும் போது; 'ம்' ஒலி , 
     வேகமாக வரும் போது அம் > அம்ம> அம்மா]

தாய் -- பால் அமுது தந்த ஆய்
     [தந்த ஆய் -தாய் ...அதனால் தான் தாய்மை எனப்படுகிறது ]

அன்னை --அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னை [அன்னை திரேசா]


உங்கள் :சிவறூபன்
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக