சனி, 24 டிசம்பர், 2011


















இதயத்தில் பூத்துவிட்ட காதலின்
அடையாள சின்னமோ என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று...
அவளுமென்னை ரசிக்க வேண்டும்
என்பதற்காகவே பலமணி நேரம்
கண்ணாடியின் முன்பு என்னை - நானே
ரசிக்க தொடங்கிவிட்டேன் புதிதாய்...

அவள் செல்லும் வழியில் பின்னால் திரும்பி
என்னைப் பார்த்தாளோ என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று...
அவள் எனக்காகவே திரும்பியிருக்க வேண்டும்
என்பதற்காகவே தினமும் வந்து நிற்கிறேன்
அவள் பார்வை மீண்டும் ஒருமுறை - கிடைக்காதாவென
காத்திருக்க துவங்கிவிட்டேன் புதிதாய்...

நாளை அடைந்திடும் முன்னேற்றத்திற்கு
பள்ளிதேர்வுகளை படித்தேனோ என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று
அவளோடு பேசிமகிழ வேண்டும்
என்பதற்காகவே கவிதைகளையும் படிக்க
கணினியின் தேடலில் நானே - என்னை
மூழ்கடிக்க ஆரம்பித்துவிட்டேன் புதிதாய்...

புதிதாய் மலர்ந்த பருவமோ
காரணம் அதுவோ.? என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று...
என்வாழ்வில் அவள் செய்திட்ட மாயமோ
என்னுயிரில் எப்படியோ.? எவ்வாறோ.?
ஓவ்வொரு நிமிடமும் நான் - இவ்வுலகில்
அவளுக்காக பிறக்கின்றேன் புதிதாய்...

வரிகளின் தொடுதலில் 
வசமாகிப்போனது என் மனது 
வளர் பிறையென வாழ்த்தி
வரம்கொடுத்தாள்.. 
நான் வளர்கிறேன்….

Poetry Store - (கவிதைக் களஞ்சியம்)

நனைந்த இதயம்

 
******

மேல் இமைகளில் உனது
நிழல் கற்பனைகளின் ஆதிக்கம் !
கீழ் இமைகளில் எனது
நிஜக் கற்பனைகளின் நிதர்சனம் !
நிழல் கலந்த உன் நிஜங்களின்
கண்களை மூடிவிடாதே !
கடைசியில் என் நிஜங்களும்
தொலைந்துவிடும் !................
###################################################

தமிழ் நாட்டு பெண் ஒன்றை
தாவணியில் கண்டேன் - அவள்
தலைநிமிர்ந்து பார்க்கையிலே
தாரகை என்று சொன்னேன்..

###################################################
உன் உயிரில் வந்து ஊஞ்சல் கட்டி
உறங்கிக்கொள்ளுவேன் பெண்ணே!
உலகிற்கு நீதான் என் மனைவி என்று
உரத்திச்சொல்லுவேன்....
###################################################

உலகத்தில் அழகான பெண்கள் அதிகம்
இருக்கும் நாடு சுவீடன் என்கிறார்கள்
உன்னைப்போல் மிச்சமுள்ள
ஆறுபேரும் நிச்சையமாக
அங்குதான் இருக்கிறார்கள் போல ...
எத்தனை முறை பார்த்தாலும்
எட்டாத நிலவுதான்
உன் கண்கள் எனக்கு...