புதன், 8 பிப்ரவரி, 2012

நெடுந்தீவு அகிலன் சிறு கவிதை பதிவுகள் 4










பூக்கள் வாடினால்
வாசனை இருக்காது
பெண்மை நீ வாடினால்
உலகில் அழகு இருக்காது...



வாயாடிக்காரி எனக்கு நீ
பாசமான ஆளு
வா
சமான அழகு நீ
ஒருவசந்தகால நிலவு....




உன் மௌனம்
என் காதலின்
தேசிய மொழி...

நிலவுக்கு பிறந்தவளா நீ..
என் நினைவுகளை பறித்தவளா நீ..
உண்மையாக எனக்கு காதலியா நீ..

நிலவுக்கு ஆயுள் இல்லை அதேபோல்
என் நினைவுக்கும் ஆயுள் இல்லை
கனவுக்கு நிறங்கள் இல்லை
நான் காதலிக்க நீயும் இல்லை...

நீ விரும்பி
சாப்பிடும் உணவில்
என் இதயமும் ஒரு வகை..

உலகத்தின் மிகச்சிறந்த இசை
உன் சிரிப்பு மட்டுமே....

வார்த்தையால் கொல்லா
தே பெண்ணே - என்னை
வாள் எடுத்து வெட்டிவிடு...

இலையுதிர் காலம் என்றால்
உன் இனிமையான
சிரிப்பைச் சொல்வேன்..
நினைத்துப் பார்த்தால்
நீயும் ஒரு அதிசயம்தான்...

தமிழ் நாட்டு பெண் ஒன்றை
தாவணியில் கண்டேன் - அவள்
தலைநிமிர்ந்து பார்க்கையிலே
தாரகை என்று சொன்னேன்..







உன் உயிரில் வந்து ஊஞ்சல் கட்டி
உறங்கிக்கொள்ளுவேன்
பெண்ணே!
உலகிற்கு நீதான் என் மனைவி என்று
உரத்திச்சொல்லுவேன்....




உலகத்தில் அழகான பெண்கள் அதிகம்
இருக்கும் நாடு சுவீடன் என்கிறார்கள்
உன்னைப்போல் மிச்சமுள்ள
ஆறுபேரும் நிச்சைய
மாக
அங்குதான் இருக்கிறார்கள் போல ...


முத்தம் - அது
எண்ணிக்கையில்லா அர்த்தம்..

பூஒன்று பூப்படைந்ததாக
பூக்கள் புலம்பிக்கொண்டு இருக்கிறது...



எத்தனை முறை பார்த்தாலும்
எட்டாத நிலவுதான்
உன் கண்கள் எனக்கு...

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என் உயிருக்குள் எப்படி நீ நுளைந்தாய்
இன்னொரு முறை பார்க்காதே
இடிந்து போகும் என் இதயம் கூட....

உயிருக்குள் ஒளிந்தவளா நீ..
குளித்தபின் உன் கூந்தல் கொண்டு
துடைத்துக்கொள்ள ஆசைதான்
உன் குனிந்த புருவ நெற்றிக்குள்ளே
குதித்துவிட ஆசைதான்..



தொலைதூர நிலவே உன்னை
தொட்டுவிட ஆசைதான்
தொல்லை இல்லா கனவே உன்னை
தொடர்ந்துகாண ஆசைதான்...

வழியில் தெரியும்
கண்ணாடிகளிலெல்லாம்
சரி பார்த்துக்கொள்கிறேன்
உன்னை வழியனுப்ப
நான் சிரித்த சிரிப்பை..