புதன், 7 செப்டம்பர், 2011

நெடுந்தீவு அகிலன் சிறு கவிதை பதிவுகள் 2

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பூக்களின் மேலே பனித்துளி
உன் முகப்பரு
போலவே தெரிகிறது
என் மனம் என்ற பாதையில்
உன் உருவம்
நிழல்களைப் போலவே வருகிறது......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்று கருவறையாக 
இருந்த உன் கண்கள்
இன்று கனவறையாக
மாறியது ஏன்?,

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அழகாக அடக்கி இருக்கிறான்
அந்த ஆண்டவன்
ஐந்து பூதங்களை
உன் கண்களில்.......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கருவில் தாங்கி 
உருவினில் உயிர் பெற 
உழைத்தவள் அம்மா 
உயிர் எழுத்தின் 
உண்மை பெயர் அம்மா....!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பெண்ணே உன்
கூந்தல் முடி
கொஞ்சம் கொடு
கிளிந்ந்து போன -என்
இதயத்தை தைப்பதற்கு.....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தொலைபேசி வளியாக
தொலைந்ததடி என் இதயம்
முகம் தெரியா இந்தக்காதல்
முதல் தடவை பூத்ததடி...
மூன்று வேளை முத்தம்
... முகம் அறியா பாசம்
ஹலோ என்று சொன்னாய்
கரைந்ததடி என் இதயம்
தொல்லையான காதல்
தொலைபேசிக்காதல்
தொடர்புகள் இல்லாவிட்டால்
தூக்கில் போடும் காதல்......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பேருந்து சாரதிகள்
வேலை நிறுத்தமாம்
சாலையில் நீ நடந்து போவதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மழைக்காலம் வந்தால்
மயிலும் நீயும் ஒன்றுதான்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உன்னைப் பற்றி
கவிதை எழுத
வேண்டுமென்றால்
நிலா மைக்கூடு வேண்டும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காதல் என்பது
இன்பமான நரகம். 
நினைவுகள் என்பது
அங்கு கொடுக்கப்படும் தண்டனை...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உனது உடைகளை ரசிக்கும்
இடையனாக ஆக்கிவிட்டாய்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உன் நினைவுகளோடு
என் இதயம் தூங்கினால்
நிச்சையம் அது என்
மரணமாகத்தான் இருக்கும்....

2 கருத்துகள்:

  1. நல்ல கவிதைகள். எனது மின்னஞ்சலைக் குறித்துக் கொள்ளுங்கள். இணைப்பதற்கான பெட்டி இல்லையே. இணைத்துக் கொள்ளுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    rathnavel.natarajan@gmail.com
    http://rathnavel-natarajan.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு