புதன், 8 பிப்ரவரி, 2012

நெடுந்தீவு அகிலன் சிறு கவிதை பதிவுகள் 4










பூக்கள் வாடினால்
வாசனை இருக்காது
பெண்மை நீ வாடினால்
உலகில் அழகு இருக்காது...



வாயாடிக்காரி எனக்கு நீ
பாசமான ஆளு
வா
சமான அழகு நீ
ஒருவசந்தகால நிலவு....




உன் மௌனம்
என் காதலின்
தேசிய மொழி...

நிலவுக்கு பிறந்தவளா நீ..
என் நினைவுகளை பறித்தவளா நீ..
உண்மையாக எனக்கு காதலியா நீ..

நிலவுக்கு ஆயுள் இல்லை அதேபோல்
என் நினைவுக்கும் ஆயுள் இல்லை
கனவுக்கு நிறங்கள் இல்லை
நான் காதலிக்க நீயும் இல்லை...

நீ விரும்பி
சாப்பிடும் உணவில்
என் இதயமும் ஒரு வகை..

உலகத்தின் மிகச்சிறந்த இசை
உன் சிரிப்பு மட்டுமே....

வார்த்தையால் கொல்லா
தே பெண்ணே - என்னை
வாள் எடுத்து வெட்டிவிடு...

இலையுதிர் காலம் என்றால்
உன் இனிமையான
சிரிப்பைச் சொல்வேன்..
நினைத்துப் பார்த்தால்
நீயும் ஒரு அதிசயம்தான்...

தமிழ் நாட்டு பெண் ஒன்றை
தாவணியில் கண்டேன் - அவள்
தலைநிமிர்ந்து பார்க்கையிலே
தாரகை என்று சொன்னேன்..







உன் உயிரில் வந்து ஊஞ்சல் கட்டி
உறங்கிக்கொள்ளுவேன்
பெண்ணே!
உலகிற்கு நீதான் என் மனைவி என்று
உரத்திச்சொல்லுவேன்....




உலகத்தில் அழகான பெண்கள் அதிகம்
இருக்கும் நாடு சுவீடன் என்கிறார்கள்
உன்னைப்போல் மிச்சமுள்ள
ஆறுபேரும் நிச்சைய
மாக
அங்குதான் இருக்கிறார்கள் போல ...


முத்தம் - அது
எண்ணிக்கையில்லா அர்த்தம்..

பூஒன்று பூப்படைந்ததாக
பூக்கள் புலம்பிக்கொண்டு இருக்கிறது...



எத்தனை முறை பார்த்தாலும்
எட்டாத நிலவுதான்
உன் கண்கள் எனக்கு...

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என் உயிருக்குள் எப்படி நீ நுளைந்தாய்
இன்னொரு முறை பார்க்காதே
இடிந்து போகும் என் இதயம் கூட....

உயிருக்குள் ஒளிந்தவளா நீ..
குளித்தபின் உன் கூந்தல் கொண்டு
துடைத்துக்கொள்ள ஆசைதான்
உன் குனிந்த புருவ நெற்றிக்குள்ளே
குதித்துவிட ஆசைதான்..



தொலைதூர நிலவே உன்னை
தொட்டுவிட ஆசைதான்
தொல்லை இல்லா கனவே உன்னை
தொடர்ந்துகாண ஆசைதான்...

வழியில் தெரியும்
கண்ணாடிகளிலெல்லாம்
சரி பார்த்துக்கொள்கிறேன்
உன்னை வழியனுப்ப
நான் சிரித்த சிரிப்பை..



நெடுந்தீவு அகிலன் சிறு கவிதை பதிவுகள் 3





காதல் மலர்களை
உன் கண்களில்
நான் பறித்தேன்....

காக்கவைப்பது
காதலியின் குணம்..
காத்து இருப்பது
காதலனின் குணம்...


காத்திருந்த என்
கவிதைகள் அத்தனைக்கும்
காதலியாக உனது வருகை...


கவிதைக்கு உருவம் தந்த நீ
ஏன் என் காதலுக்கு
இதயம் தரவில்லை..!



தினமும் நீ
சேலைகட்டி போகிறாய்
ஏன்?
கண்ணாடி உன்னை
சேலைகட்டவா சொல்கிறது...!

நீ நியூசிலாந்து
பால் குடிப்பதால்
நியூசிலாந்து அழகாக இருக்கிறது..


முகம் தெரியாது ஆனால்
உன் மனம் தெரியும்..

இரவில் தெரியும்
வானவில் நீ - என்
இதயத்தில் உறங்கும்
நினைவும் நீ....



எழுது எழுது எனக்கு ஒரு
கவிதை எழுது
நீ என் காதலி என்று..

இந்திய
சேலைகட்டும்
இலங்கை தேவதை நீ...


பூக்களில் இல்லாத வாசம்
உன் கூந்தலில் கண்டேனடி
பூவைக்குள் இல்லாத வெட்கம்
உன்னிடம் கொண்டேனடி...

மனிதனால் செய்யப்பட்டது
அதிசயம் என்றால்!
இறைவனால் செதுக்கப்பட்ட நீ
அதிசயம் இல்லையா?...


முத்தத்தால் இதழ்களை மூடினேன்
சத்தம் இல்லாமல் அவள்
கண்களை மூடினாள்...








சனி, 24 டிசம்பர், 2011


















இதயத்தில் பூத்துவிட்ட காதலின்
அடையாள சின்னமோ என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று...
அவளுமென்னை ரசிக்க வேண்டும்
என்பதற்காகவே பலமணி நேரம்
கண்ணாடியின் முன்பு என்னை - நானே
ரசிக்க தொடங்கிவிட்டேன் புதிதாய்...

அவள் செல்லும் வழியில் பின்னால் திரும்பி
என்னைப் பார்த்தாளோ என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று...
அவள் எனக்காகவே திரும்பியிருக்க வேண்டும்
என்பதற்காகவே தினமும் வந்து நிற்கிறேன்
அவள் பார்வை மீண்டும் ஒருமுறை - கிடைக்காதாவென
காத்திருக்க துவங்கிவிட்டேன் புதிதாய்...

நாளை அடைந்திடும் முன்னேற்றத்திற்கு
பள்ளிதேர்வுகளை படித்தேனோ என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று
அவளோடு பேசிமகிழ வேண்டும்
என்பதற்காகவே கவிதைகளையும் படிக்க
கணினியின் தேடலில் நானே - என்னை
மூழ்கடிக்க ஆரம்பித்துவிட்டேன் புதிதாய்...

புதிதாய் மலர்ந்த பருவமோ
காரணம் அதுவோ.? என்னவோ.?
தெரியாது.... ஆனால், இன்று...
என்வாழ்வில் அவள் செய்திட்ட மாயமோ
என்னுயிரில் எப்படியோ.? எவ்வாறோ.?
ஓவ்வொரு நிமிடமும் நான் - இவ்வுலகில்
அவளுக்காக பிறக்கின்றேன் புதிதாய்...

வரிகளின் தொடுதலில் 
வசமாகிப்போனது என் மனது 
வளர் பிறையென வாழ்த்தி
வரம்கொடுத்தாள்.. 
நான் வளர்கிறேன்….

Poetry Store - (கவிதைக் களஞ்சியம்)

நனைந்த இதயம்

 
******

மேல் இமைகளில் உனது
நிழல் கற்பனைகளின் ஆதிக்கம் !
கீழ் இமைகளில் எனது
நிஜக் கற்பனைகளின் நிதர்சனம் !
நிழல் கலந்த உன் நிஜங்களின்
கண்களை மூடிவிடாதே !
கடைசியில் என் நிஜங்களும்
தொலைந்துவிடும் !................
###################################################

தமிழ் நாட்டு பெண் ஒன்றை
தாவணியில் கண்டேன் - அவள்
தலைநிமிர்ந்து பார்க்கையிலே
தாரகை என்று சொன்னேன்..

###################################################
உன் உயிரில் வந்து ஊஞ்சல் கட்டி
உறங்கிக்கொள்ளுவேன் பெண்ணே!
உலகிற்கு நீதான் என் மனைவி என்று
உரத்திச்சொல்லுவேன்....
###################################################

உலகத்தில் அழகான பெண்கள் அதிகம்
இருக்கும் நாடு சுவீடன் என்கிறார்கள்
உன்னைப்போல் மிச்சமுள்ள
ஆறுபேரும் நிச்சையமாக
அங்குதான் இருக்கிறார்கள் போல ...
எத்தனை முறை பார்த்தாலும்
எட்டாத நிலவுதான்
உன் கண்கள் எனக்கு...

புதன், 7 செப்டம்பர், 2011

நெடுந்தீவு அகிலன் சிறு கவிதை பதிவுகள் 2








>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




பூக்களின் மேலே பனித்துளி
உன் முகப்பரு
போலவே தெரிகிறது
என் மனம் என்ற பாதையில்
உன் உருவம்
நிழல்களைப் போலவே வருகிறது......


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அன்று கருவறையாக 
இருந்த உன் கண்கள்
இன்று கனவறையாக
மாறியது ஏன்?,


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அழகாக அடக்கி இருக்கிறான்
அந்த ஆண்டவன்
ஐந்து பூதங்களை
உன் கண்களில்.......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கருவில் தாங்கி 
உருவினில் உயிர் பெற 
உழைத்தவள் அம்மா 
உயிர் எழுத்தின் 
உண்மை பெயர் அம்மா....!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



பெண்ணே உன்
கூந்தல் முடி
கொஞ்சம் கொடு
கிளிந்ந்து போன -என்
இதயத்தை தைப்பதற்கு.....


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


தொலைபேசி வளியாக
தொலைந்ததடி என் இதயம்
முகம் தெரியா இந்தக்காதல்
முதல் தடவை பூத்ததடி...
மூன்று வேளை முத்தம்
... முகம் அறியா பாசம்
ஹலோ என்று சொன்னாய்
கரைந்ததடி என் இதயம்
தொல்லையான காதல்
தொலைபேசிக்காதல்
தொடர்புகள் இல்லாவிட்டால்
தூக்கில் போடும் காதல்......




>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பேருந்து சாரதிகள்
வேலை நிறுத்தமாம்
சாலையில் நீ நடந்து போவதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




மழைக்காலம் வந்தால்
மயிலும் நீயும் ஒன்றுதான்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



உன்னைப் பற்றி
கவிதை எழுத
வேண்டுமென்றால்
நிலா மைக்கூடு வேண்டும்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


காதல் என்பது
இன்பமான நரகம். 
நினைவுகள் என்பது
அங்கு கொடுக்கப்படும் தண்டனை...


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உனது உடைகளை ரசிக்கும்
இடையனாக ஆக்கிவிட்டாய்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




உன் நினைவுகளோடு
என் இதயம் தூங்கினால்
நிச்சையம் அது என்
மரணமாகத்தான் இருக்கும்....